குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் நந்தியம்பாக்கத்தில் மக்கள் தவிப்பு
மீஞ்சூர்,மீஞ்சூர் ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கியம்மன் நகரில், 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தெருச்சாலைகளிலும், மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதித்து உள்ளது.குடியிருப்புகளைசுற்றிலும் மழைநீர் சூழந்து கிடப்பதால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அச்சுறுத்துகின்றன.மீஞ்சூர் பேரூராட்சியின்கழிவுநீர் மழைநீருடன் கலப்பதால், குடியிருப்புவாசிகள் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:குடியிருப்புகளை சூழும் மழைநீர் உடனுக்குடன் வெளியேறுவதற்கு சரியான கால்வாய்அமைக்கப்படாமல்உள்ளது. ஒவ்வொருஆண்டும் மழையின் போது, எங்கள் பகுதி தீவாக மாறி விடுகிறது.மழைவிட்டு, மழைநீர் வடிவதற்கு பலநாட்கள்ஆகும். அதுவரை இன்னல்களுடன் வசிக்க வேண்டும். இதனால் சுகாதார பாதிப்புகளும் ஏற்படுகிறது. மழைநீர் வெளியேறுவதற்கான நிரந்திர தீர்வு காண ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.