உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரவு மாநகர பஸ் நிறுத்தத்தால் திருமழிசை பகுதியினர் அவதி

இரவு மாநகர பஸ் நிறுத்தத்தால் திருமழிசை பகுதியினர் அவதி

திருமழிசை, திருமழிசை பேரூராட்சி பகுதியிலிருந்து, தினமும் பலர், சென்னை பிராட்வே பகுதியில் பணிக்கு சென்று வருகின்றனர்.இதற்காக, திருமழிசையிலிருந்து, பிராட்வே பகுதிக்கு இயக்கப்படும், '101எக்ஸ்' என்ற மாநகர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். சில தினங்களாக, இரவு 9:15 மணிக்கு பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து, திருமழிசை பகுதிக்கு இயக்கப்படும், '101எக்ஸ்' என்ற தடம் எண் கொண்ட பேருந்து இயக்கப்படவில்லை.இதனால், திருமிழசை பகுதியினர், வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்,பேருந்து நிலைய அதிகாரியிடம் இதுகுறித்து கேட்ட போது, முறையான தகவல் இல்லை என, திருமழிசை பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து இரவு நேரத்தில் நிறுத்தப்பட்ட கடைசி பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துளளனர்.இதுகுறித்து, மாநகர பேருந்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து, இரவு நேர பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை