உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலர் கைது

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலர் கைது

போரூர்:போரூரில் நிலத்தை அளவீடு செய்து அறிக்கை வழங்க 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.போரூர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் சிவகுமார், 34. இவரது அலுவலகம், போரூர் - பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், உள்ளது. போரூரில் உள்ள ஒருவரின் நிலத்தை அளவீடு செய்து அறிக்கை வழங்குவதற்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் அளித்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். நேற்று அலுவலகத்தில் இருந்த வருவாய் ஆய்வாளர் சிவகுமார் லஞ்சப்பணம் 10,000 ரூபாயை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருவாய் ஆய்வாளர் சிவக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ