உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் நெற்களம் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாலங்காடில் நெற்களம் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாலங்காடு, திருவாலங்காடில், 700 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. இதில், நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில், அறுவடை செய்த பயிர்களை உலர்த்தி பிரித்தெடுப்பதற்கு ஏற்ற நெற்களம் இல்லை.பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நெற்களம் துார்ந்துள்ளது. வேறு நெற்களம் இல்லாததால், அதன் மீதே தானியங்களை உலர வைக்கின்றனர். பெரும்பாலானோர் சாலைகளிலும், தார்ப்பாய் அமைத்தும் உலர வைக்கின்றனர்.பல விவசாயிகள், தங்கள் நெல்லை பாதுகாத்து வைக்க இடமில்லாததால், தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர். எனவே, விவசாயிகளின் வசதிக்காக, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர், இப்பகுதியில் புதிய நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை