உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்

மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி:சோழவரம் பகுதியில், தொடர் மின்வெட்டை கண்டித்து, அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோழவரம் பகுதியில், கடந்த 22ம் தேதி கனமழை பெய்தது. அப்போது, மின் வினியோகம் தடைபட்டது. நேற்று முன்தினம் இரவு வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு, சோழவரம் பகுதியில், காரனோடை - சோழவரம் சாலையை மறித்து, அப்பகுதி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை