உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலை சேதம் :வாகன ஓட்டிகள் கடும் அவதி

 சாலை சேதம் :வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருவாலங்காடு: மணவூர் ரயில் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம், மணவூரில் ரயில் நிலையம் செல்லும் சாலை உள்ளது. இங்கு, ரயில்வே சுரங்கப்பாதை எதிரே உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், நடந்து செல்லும் பயணியர், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும், திருவாலங்காடு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணியர், இச்சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளதால், அவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை