உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலையோரம் குப்பை கழிவுகள் சுகாதாரம், போக்குவரத்து பாதிப்பு

 சாலையோரம் குப்பை கழிவுகள் சுகாதாரம், போக்குவரத்து பாதிப்பு

மணவாளநகர்: 'சாலையோரம் குப்பை கொட்டக் கூடாது' என, எச்சரிக்கை பதாகை வைத்தும், பகுதி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், மணவாளநகரில் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இங்குள்ள கருணாநிதி நகரில், தனிநபருக்கு சொந்தமான இடத்தில், அப்பகுதி மக்கள் குப்பை கொட்டி வந்தனர். இந்நிலையில், குப்பை கொட்டாதவாறு தனிநபர் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலையோரம் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், அவ்வழியே செல்லும் பகுதி மக்கள், துர்நாற்றத்தால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், மணவாளநகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகள், அந்த இரும்பு தடுப்பில், 'வெங்கத்துார் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் குப்பை கொட்டக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர். ஆனால், அப்பகுதி மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி