மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை
02-Jun-2025
ஆர்.கே.பேட்டைஆட்டோவை திருட முயன்றவர்களை பகுதிவாசிகள் பிடிக்க முயன்ற போது தப்பியோடினர்.ஆர்.கே.பேட்டை அடுத்த சின்னநாகபூண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தி விட்டு துாங்க சென்றார்.நள்ளிரவு 2:00 மணியளவில், அவரது ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு திடுக்கிட்டார்.வெளியில் வந்து பார்த்தபோது இரண்டு நபர்கள், ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தனர். உடனே, அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர்.விசாரணையில், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ஈஸ்வர் தாமு, 30, பிரதாப், 33, என தெரியவந்துள்ளது. ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
02-Jun-2025