உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் பள்ளியில் ரூ.12 லட்சம் திருட்டு

தனியார் பள்ளியில் ரூ.12 லட்சம் திருட்டு

திருவள்ளூர்: திருமழிசையில் உள்ள தனியார் பள்ளியில், 12 லட்சம் ரூபாய் திருடுபோனது குறித்து, வெள்ளவேடு போலீசார் விசாரிக்கின்றனர். திருமழிசை பேரூராட்சியில் சென்னை பப்ளிக் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், அதன் செலவுக்காக பள்ளி அலுவலர்கள், 12 லட்சம் ரூபாயை, பள்ளியில் உள்ள லாக்கரில் வைத்துவிட்டு, கடந்த 24ம் தேதி இரவு சென்றனர். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்து பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 12 லட்சம் ரூபாய் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து, பள்ளியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 24ம் தேதி இரவு, முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், லாக்கரை உடைத்து, அதிலிருந்த பணத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !