உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அதிக லாபம் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

அதிக லாபம் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் மங்களகுமார், 37. தனியார் நிறுவன ஊழியர். இவருடன், கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜன், 36, என்பவர் பணிபுரிந்து வந்தார். ராஜன், மங்களகுமாரிடம் தனியாக கம்பெனி துவங்கினால், அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, 2020 ஜூலை மாதம் 16 லட்சம் ரூபாய் மற்றும் 2 சவரன் நகைளை பெற்றார். பின், கம்பெனி ஆரம்பித்த நிலையில், பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், ராஜன் கொடுத்த வங்கி காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. கடந்த 2024 நவம்பர் மாதம் கொடுத்த பணம், நகைகளை கேட்ட மங்களகுமார், ராஜனை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பலமுறை மங்களகுமார் பணம் கேட்டும் ராஜன் தரவில்லை.நேற்று முன்தினம் இரவு மங்களகுமார் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை