ரூ.18 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்: மும்பை வாலிபர் கைது
மப்பேடு:மப்பேடு பகுதியில் போதை மாத்திரை பறிமுதல் செய்த போலீசார் மும்பை வாலிபரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இரு தினங்களாக, போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்களை, போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையில் இருந்து, இவர்களுக்கு போதை மாத்திரைகள் வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மும்பையை சேர்ந்த மாத்திரை வியாபாரியான முகமது ரியாஸ் சவுத்ரி, 26, என்பவரை விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு மப்பேடு காவல் நிலையம் வந்த முகமது ரியாஸ் சவுத்ரியிடம் காவல் ஆய்வாளர் சுரேந்தர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் போதை மாத்திரை விற்பனை செய்தது குறித்து அளித்த தகவல்படி தொடுகாடு பகுதியில் பாழடைந்த கட்டடத்தில் இருந்து 37,300 டைடால் என்னும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மும்பை வாலிபரை கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ. 18.65 லட்சம் ரூபாய் என மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.