உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 135.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் 1,040 கட்ட 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. பின் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இலவச வீட்டு மனை வழங்குவதாக தெரிவித்து வருவாய் அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்தினர்.அதிகாரிகள் தெரிவித்த அரசு புறம்போக்கு இடத்தில் குடிசைகள் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதையடுத்து நேற்று முருக்கம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருத்தணி ஆர்.டி.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து மனு அளித்து விட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ