ஊரக திறனாய்வு தேர்வு 2,072 மாணவர்கள் பங்கேற்பு
திருத்தணி:தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையில், ஊரக பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அந்த வகையில், நடப்பாண்டிற்காக ஊரக திறனாய்வு தேர்வு, நேற்று, 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடந்தது. இதில் தேர்வு எழுதுவதற்காக விருப்பம் தெரிவித்திருந்த, 2,167 மாணவர்களில், 2,072 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மீதமுள்ள, 95 மாணவர்கள் தேர்வு எழுத வராமல் ஆப்செட் ஆனர்.இந்த தேர்வில், அரசு பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்க தகுதியானவர்கள். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.