உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருள் விற்பனை

அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருள் விற்பனை

திருவள்ளூர்:அரசு அலுவலகங்களில் தேங்கி கிடக்கும் பயன்பாட்டிற்கு இல்லாத பொருட்கள் தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தேவையற்ற மற்றும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதம், அட்டை, பிளாஸ்டிக், இரும்பு, மின்னணு சாதனம் மற்றும் கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து, தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.வரும் 5ம் தேதி காலை 10.00 மணி முதல் அந்தந்த அலுவலக தலைமையிடத்தில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. கொள்முதல் செய்ய விருப்பம் உள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் https://forms.gle/bJfsm6BJsJ9m2DBX7 என்ற இணையதளத்தில், வரும் 5ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை