பவானியம்மன் கோவிலில் சமபந்தி போஜனம்
ஊத்துக்கோட்டை:சுதந்திர தினத்தை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் சமபந்தி போஜனம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில், அம்மனுக்கு சாற்றப்பட்ட புடவைகள், 10,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அதிகளவு திரண்டதால், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.