உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செவிலியர் தாக்கியதாக புகார் துாய்மை பணியாளர்கள் தர்ணா

செவிலியர் தாக்கியதாக புகார் துாய்மை பணியாளர்கள் தர்ணா

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், செவிலியர் தாக்கியதாக குற்றம்சாட்டி, துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 1,000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில், 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று, 'இரண்டாவது தளத்தில் சுத்தம் செய்யவில்லை' எனக்கூறி, மீரா என்ற செவிலியர், மாலா, 45, என்ற துாய்மை பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், முதல் தளத்தில் உள்ள மருத்துவ நிலைய அலுவலர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உதவி மருத்துவ நிலைய அலுவலர் பிரபுசங்கர், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். இதையடுத்து, துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை