உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சவுடு மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

சவுடு மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

ஆர்.கே.பேட்டை, செப். 25-– சவுடு மண் கடத்திய டிப்பர் லாரியும், மண் வெட்ட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரமும், நேற்று போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.கே.பேட்டை அருகே, அனுமதியின்றி சவுடு மண் கடத்தப்படுவதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு டிப்பர் லாரிக்கு சவுடு மண்ணை வெட்டி எடுத்து ஏற்றிக்கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். டிப்பர் லாரி ஓட்டுநரை மடக்கி பிடித்தனர். அதற்குள், பொக்லைன் இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்த நபர், தப்பியோடினார். போலீசாரின் விசாரணையில், டிப்பர் லாரி ஓட்டுநர், ராணிப்பேட்டை மாவட்டம், நடப்பாய் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், 26, என, தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார், சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பொக்லைன் இயந்திர இயந்திர ஓட்டுநர், ராணிப்பேட்டை மாவட்டம், ஏரிமுன்னனுாரை சேர்ந்த நந்தகுமார், 28, என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி