உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

திருவள்ளூர்; மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் உள்ள மாணவ - மாணவியருக்கு, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கு, புதிய மற்றும் புதுப்பித்தல் ஆகிய விண்ணப்பத்தை, மாணவ - மாணவியர் கல்வி நிறுவனங்களில் அளிக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை, சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அலுவலகத்திற்கு, வரும் டிச., 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி