உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டறையில் திருடிய காவலாளிக்கு காப்பு

பட்டறையில் திருடிய காவலாளிக்கு காப்பு

கும்மிடிப்பூண்டி,புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 46; அருகில் உள்ள பாப்பன்குப்பம் கிராமத்தில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.இவரது, பட்டறையில் இருந்து, 15 கிலோ எடை, பித்தளை புஷ் மற்றும் இரும்பு பிளேட்டுகள் திருடப்பட்டு உள்ளது. அதை திருடியது, தொழிற்சாலையின் காவலாளியான பாப்பன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாலன், 54, என்பது தெரியவந்தது.சிவா அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், காவலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ