உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தகுதி சான்று இல்லாமல் ஓடிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்

தகுதி சான்று இல்லாமல் ஓடிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில், 1,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில், சிலர் ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று, அனுமதி சான்று மற்றும் போதையில் ஓட்டுவதாக திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாளுக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, காவல்துறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில், எஸ்.ஐ., சிட்டிபாபு மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காலை, திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்ததில் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ