உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் கரைக்க...இடங்கள் தேர்வு: ரசாயன வர்ணம் பூசினால் கடும் நடவடிக்கை பாயும்

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் கரைக்க...இடங்கள் தேர்வு: ரசாயன வர்ணம் பூசினால் கடும் நடவடிக்கை பாயும்

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ரசாயன வர்ணம் கலக்காத சிலைகளை மட்டும் கரைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.விநாயகர் சதுர்த்தி திருவிழா, வரும் 27ம் தேதி, நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் வகையில், விநாயகர் சிலைகளை வடிவமைத்து, வீடு, கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், வழக்கம் போல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் மும்முரமாக உள்ளனர். இதற்காக, மாவட்டம் முழுதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில், சிலை அமைப்பாளர்கள் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும், தாங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிலைகளை, ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைப்பது பக்தர்களின் வழக்கம்.விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை, மாவட்ட நிர்வாகங்கள் தேர்வு செய்து அறிவித்து உள்ளன.இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளை கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள், www.tnpcb.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளன.மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.விநாயகர் சிலைகளை, களி மண்ணால் மட்டுமே செய்து, நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' 'பிளாஸ்டிக்' தெர்மாகோல் கலவையில்லாத, சுற்றுச்சூழலை பாதிக்காத மூல பொருட்களால் உருவான சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.சிலைகளுக்கு வர்ணம் பூச, நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வர்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது, 'எனாமல்' மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வர்ண பூச்சுகளை பயன்படுத்த கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.சிலைகள் கரைக்க ஒதுக்கப்பட்ட இடங்கள் திருவள்ளூர் மாவட்டம் - 19 புட்லுார் ஏரி - எம்.ஜி.ஆர்., நகர் காக்களூர் ஏரி - திருவள்ளூர் கூவம், ஈசா ஏரி - மப்பேடு திருமழிசை ஏரி - வெள்ளவேடு ஊத்துக்கோட்டை குளம் சித்தேரி- ஊத்துக்கோட்டை கொசஸ்தலையாறு - ஊத்துக்கோட்டை காந்தி சாலை குளம் - திருத்தணி நந்தியாறு - திருத்தணி பராசக்தி நகர் குளம் - திருத்தணி வண்ணான் குளம் - ஆர்.கே.பேட்டை தாமரைக்குளம், விளக்கணாம்பூடி - ஆர்.கே.பேட்டை செல்லத்துார் ஏரி - ஆர்.கே.பேட்டை கரீம்பேடு குளம் - பள்ளிப்பட்டு பாண்டரவேடு ஏரி - பொதட்டூர்பேட்டை கனகமாசத்திரம் குளம் ஏழுகண் பாலம் - கும்மிடிப்பூண்டி பகிங்ஹாம் கால்வாய் - கும்மிடிப்பூண்டி பழையசாத்தன்குப்பம் - பொன்னேரி செங்கல்பட்டு மாவட்டம் - 2 மாமல்லபுரம் கடற்பகுதி வடபட்டினம் கடற்பகுதி திருவள்ளூர் மாவட்டம் - 2 பொன்னேரிக்கரை ஏரி சர்வதீர்த்த குளம்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ