உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் செப்டிக் டேங்க் கழிவுநீர் நாகலாபுரத்தில் நோய் பரவும் ஆபத்து

சாலையில் செப்டிக் டேங்க் கழிவுநீர் நாகலாபுரத்தில் நோய் பரவும் ஆபத்து

ஊத்துக்கோட்டை, சாலையில் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும், 'செப்டிங் டேங்க்' கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் காமராஜர் திருமண மண்டப சாலையில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. இங்குள்ள குறுக்குத் தெருவில், வீடுகளில் இருந்து மலம் கலந்த நீர் வெளியேறி, தேங்கி நிற்கிறது. அதனால், அவ்வழியே செல்வோர் இந்த நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துற்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பலன் இல்லை. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ