உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் அவதி

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் அவதி

பெரியபாளையம்,பெரியபாளையம் சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலில் சிக்கி, பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், கடந்த 17ம் தேதி ஆடி மாத விழா துவங்கியது. வழக்கமாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்வர். ஆடி மாத திருவிழாவையொட்டி, முதல் ஞாயிறு துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து, அதிக அளவு பக்தர்கள் பெரியபாளையத்திற்கு வருகின்றனர். இங்கு, போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. எல்லாபுரம் ஒன்றிய அலுவலகம் துவங்கி, ஆரணி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் வரை, சாலையின் இருபுறமும் கார், ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரியபாளையம் போலீசார், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். எனவே, ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த, மாவட்ட எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !