மேலும் செய்திகள்
திருப்போரூர் ஒன்றியத்தில் 12 ஏரிகள் நிரம்பின
27-Oct-2025
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில், மழை நீருடன் கலந்த கழிவுநீர், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி நகரின் மத்தியில், 48 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாமரை ஏரி, நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. தொழிற்சாலைகள், வீடுகள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஏரியில் கலந்து வருகிறது. இதனால், ஏரி கழிவுநீர் தேக்கும் மையமாக மாறிவிட்டது. கடந்த 2023 மே மாதத்தில் ஏரியில், மீன்கள் செத்து மிதந்தன. ஏரி முழுதும் ஆகாய தாமரை சூழ்ந்து பரிதாபான நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த மழையில், தாமரை ஏரி நிரம்பி, கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விட்டது. இதனால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளனர். தாமரை ஏரியில் இருந்து நிரம்பி வழியும் கழிவுநீர், அடுத்தடுத்து உள்ள சோழியம்பாக்கம், அயநல்லுார் ஏரிகளை சென்றடைகிறது. இதனால் அந்த ஏரிகளும் மாசு அடையும் ஆபத்தான சூழலில் உள்ளது. ஏரி மாசடைவதை நீர்வளத்துறையும் கண்டு கொள்ளவில்லை; மாசு கட்டுப்பாட்டு வாரியமும் வேடிக்கை பார்த்ததே இந்த சிக்கலுக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியை புதுப்பிக்கும் பணிக்காக, 13 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்து அனுப்பியுள்ளோம். விரைவில் ஒப்புதல் பெற்று, தாமரை ஏரியை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்' என்றார்.
27-Oct-2025