நெடுஞ்சாலையில் கழிவுநீர் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியிலிருந்து காவல்சேரி, வயலாநல்லுார், கோலப்பன்சேரி, பாரிவாக்கம் வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இவ்வழியே தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோரம் மழைநீர் கால்வாய் இல்லாததால், மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.