பள்ளி எதிரே தேங்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கேசவ ராஜ குப்பம் கிராமத்தில், 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் தெற்கு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது. தொடக்கப்பள்ளியில், 150 மாணவர்களும் அங்கன்வாடியில், 25 குழந்தைகளும் படித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தொடக்கப்பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி நுழைவாயில் எதிரே கடந்தாண்டு புதிதாக கழிவுநீர் கால்வாயில் கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிவு நீர் கால்வாய் தொடர்ந்து சீராக பராமரிக்கப்படாததால் துார்ந்து கிடக்கிறது. இதனால் பள்ளியின் நுழைவாயில் எதிரே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதே வளாகத்தில், கால்வாயை ஒட்டி அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.