உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை பராமரிப்பு படுமோசம்

நிழற்குடை பராமரிப்பு படுமோசம்

கொண்டஞ்சேரி, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டஞ்சேரி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் எதிரே, 2021 - 2022ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியின் கீழ், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் வளர்ந்து மாயமாகி வருகிறது. இதனால், இந்த நிழற்குடையை பயன்படுத்தும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பயணியர் நிழற்குடை எதிரே ஊராட்சி அலுவலகம் இருந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள நிழற்குடையை வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை