உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்ப்பிடிப்பு பகுதியில் புதர் மண்டிய கால்வாய்

நீர்ப்பிடிப்பு பகுதியில் புதர் மண்டிய கால்வாய்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருநாதராஜபுரம் ஊராட்சி, ஆந்தர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. சித்துார் மாவட்ட நீர்பிடிப்பு பகுதியான புல்லுார் மலைப்பகுதியில் இருந்து திருநாதராஜபுரம் கிராமம் வழியாக நீர்வரத்து உள்ளது.நேசனுார் அருகே ஓடையாக உருவெடுத்து, நாகபூண்டி, வீரமங்கலம் உள்ளிட்ட தமிழக ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், திருநாதராஜபுரம் அருகே உள்ள முதன்மையான நீர்வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இன்றி சீரழிந்து கிடக்கின்றன.இதனால், வரும் மழைக்காலத்தில் ஆந்திர மாநில நீர்வரத்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு தடைபடும் நிலை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், நேசனுார் ஓடையில் பெருக்கெடுத்து பாய்ந்த வெள்ளத்தில், ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் சேதம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ