உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேனீக்கள் கொட்டி ஆறு பேர் காயம்

தேனீக்கள் கொட்டி ஆறு பேர் காயம்

திருத்தணி, திருத்தணி அருகே பூந்தோட்டத்தில் பூ பறித்து கொண்டிருந்த ஆறுபேர் தேனீக்கள் கொட்டி காயமடைந்தனர். திருத்தணி தாலுகா தாழவேடை சேர்ந்த தேவசுந்தரம், 52, வடிவேல், 45, அற்புதம், 55, அனிதா, 34, சித்ரா, 48 மற்றும் காவியா, 24. இவர்கள் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ராவணன் என்பவரின் பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தேனீக்கள் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதில் ஆறு பேரும் காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் ஆறு பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ