உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகை கொள்ளை வழக்கு ஆறு பேர் சிக்கினர்

நகை கொள்ளை வழக்கு ஆறு பேர் சிக்கினர்

பொதட்டூர்பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு, 66. கடந்த மாதம் 26ம் தேதி இவரது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது.தகவல் அறிந்து வந்த திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில், 71 சவரன் நகை மற்றும் 70,000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.விசாரணையில், கொண்டாபுரத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, 32, ஆந்திர மாநிலம், கன்னிகாபுரத்தை சேர்ந்த தினேஷ், 23, ராகவநாயுடுகுப்பத்தைச் சேர்ந்த வேலு, 35, பூபதி, 24, ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் அடகு கடை நடத்தி வரும் வாசு என்பவரிடம் கொள்ளையடித்த நகையை கொடுத்துள்ளனர். இதற்கு, அரக்கோணம் அடுத்த மோசூரைச் சேர்ந்த சுபா உதவி செய்துள்ளார்.அந்த நகையில் சிலவற்றை உருக்கி, பணமாக கொள்ளை கும்பலிடம், வாசு கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இவர்களிடம் இருந்து 34 சவரன் நகை மற்றும் 8.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி