உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு மென்பொருள் திறன் வளர் பயிற்சி

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு மென்பொருள் திறன் வளர் பயிற்சி

திருவள்ளூர்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ‘தாட்கோ’ வாயிலாக, பல்வேறு மென்பொருள் திறன் வளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, ‘தாட்கோ’ மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் இணைந்து, பல்வேறு திறன் வளர் பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளன. இதில், வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவு பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் உள்ளிட்ட திறன் வளர் பயிற்சிகள் அடங்கும். சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அளிக்கப்பட உள்ள இந்த பயிற்சியில், 18 – 35 வயதிற்குட்பட்ட இளங்கலை பொறியியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல் மற்றும் இளங்கலை வணிகவியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம். இப்பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படுவதோடு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் வாயிலாக, தகுதியானோருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர, www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை