உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிடப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

கிடப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

கொரட்டூர்:பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்டது கொரட்டூர் ஊராட்சி. இப்பகுதியில் கிராம சேவை மையம் அருகே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக உரக்குழிகள் வெட்டப்பட்டுள்ளன.இதையடுத்து, மக்கும், மக்காத குப்பை பிரிக்கப்பட்டு, மண்புழு உரம் தயாரிக்கும் வகையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் 2017 - 18ம் ஆண்டு துவக்கப்பட்டது.ஆனால், ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டியதால், தற்போது செடி, கொடிகளுக்கு மத்தியில் மாயமாகி வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதே பகுதியில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடமும் பயன்பாடில்லாமல் வீணாகி போனது.எனவே, ஊராட்சி பகுதிகளில் துவங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, மண்புழு உரம் தயாரிக்க, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ