மேலும் செய்திகள்
வஞ்சலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை
26-Nov-2024
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது பஞ்சாட்சரமலை. இந்த மலை உச்சியில், 700 ஆண்டுகள் பழமையான மரகதேஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். பிரத்யேக கோவில் இன்றி, மலை உச்சியில் பரந்தவெளியில் மூலவர் அருள்பாலித்து வருகிறார். பக்தர்களே அபிஷேகம் செய்கின்றனர்.பிரதோஷம், சோமவார பூஜை உள்ளிட்டவை இங்கு நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமையான நேற்று காலை மரகதேஸ்வரருக்கு சோமவார சிறப்பு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஹகாளிகாபுரம், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
26-Nov-2024