உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாய் மாயமான சோகத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை

தாய் மாயமான சோகத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை

பிஞ்சிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 42. இவருக்கு புஷ்பா, 38, என்ற மனைவியும், மாதேஷ், 18, என்ற மகனும் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மூன்று மாதங்களுக்கு முன் புஷ்பா வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இரு நாட்களுக்கு முன், திருவள்ளூர் பகுதியில் புஷ்பாவை, மாதேஷ் பார்த்தபோது, அவர் கண்டும் காணாமல் சென்றதாக கூறப்படுகிறது.இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாதேஷ், நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த கடம்பத்துார் போலீசார், உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை