உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, நெடியம், புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.தற்போது, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. இந்நிலையில், நெடியம் கிராமத்தில் இருந்து, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி யில் படித்து வரும் மாணவர்கள், நெடியம் தரைப்பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பள்ளி யில் இருந்து தனியார் வாகனங்கள் வாயிலாக, மாணவர்கள் பாதுகாப்பாக மாற்றுப்பாதையில் நெடியம் கிராமத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் சம்பத் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். நெடியம் தரைப்பாலம், ஐந்து ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை