உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழு ஆய்வு

தனியார் பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழு ஆய்வு

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தச்சூரில் உள்ள மைதானம் ஒன்றில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை, சிறப்பு தணிக்கை குழு நேற்று ஆய்வுசெய்தது.பொன்னேரி சப் - கலெக்டர் ரவிக்குமார் தலைமையில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவானந்தன், மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வுசெய்தனர்.பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால கதவுகள்,முதலுதவி பெட்டிகள், புத்தகங்கள் வைப்பதற்கானஇடம், 'சிசிடிவி' கேமரா, ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்ட 21 அம்சங்கள் இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்தனர்.குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களை, சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தினர்.பள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால், தீ அணைப்பான் கருவியை பயன்படுத்துவது எப்படி என, தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செய்துகாண்பித்தனர்.மொத்தம், 192 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டதில், 18 வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.அவற்றை சரி செய்ய திருப்பி அனுப்பப்பட்டது. இதர, 174 பள்ளி வாகனங்களுக்கு அனுமதிவழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை