உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சிறப்பு முகாம்

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சிறப்பு முகாம்

திருவள்ளூர்:வீட்டு வேலை செய்து வருவோர், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.பொன்னேரி தொழிலாளர் நல உதவி ஆணையர் - சமூக பாதுகாப்பு திட்டம், செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு வீட்டு பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு, அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.நல வாரியத்தில், புதிய உறுப்பினர் பதிவு செய்து கொள்ள, எண்: 58, சிந்துார் நகர், தடப்பெரும்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10:00 - மாலை 4:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். முகாமில் பங்கேற்க வருவோர், ஆதார், ரேஷன் கார்டு, பிறந்த தேதிக்கான ஆவணம், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வரவும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2797 2221, 2957 0457 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை