ஆதரவற்ற நலவாரிய உறுப்பினராக வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்
திருவள்ளூர், மே 25-திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கைம்பெண் மற்றும் ஆதரவற்ற நலவாரியத்தில் உறுப்பினராக சேர, வரும் 4ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர், கணவனால் கைவிடப்பட்டோர், திருமணமாகாத 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆகியோரின் நலனுக்காக, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற நலவாரியம் செயல்பட்டு வருகிறது.அரசு திட்டங்களின் கீழ் பயனடைய, www.tnwidowwelfareboard.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம்.இந்த நலவாரியத்தில் உறுப்பினராகும் நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்ய வழிவகை செய்யப்படும். மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ வாயிலாக, மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும், இத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கவும், நலவாரியத்தில் உறுப்பினராக இணைக்கவும், வரும் 4ம் தேதி காலை 11:00 மணிக்கு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.