உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் வரும் 28ம் தேதி சிறப்பு முகாம்

திருத்தணியில் வரும் 28ம் தேதி சிறப்பு முகாம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், வரும் 28ம் தேதி திருத்தணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களை நாடி குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும், மாதம் ஒரு வட்டத்தில் தங்கி, மக்கள் குறைகளை கேட்டு வருகின்றனர். இத்திட்டத்தின்படி, வரும் 28ம் தேதி திருத்தணியில் கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு, மக்களின் குறைகளை ஆய்வு செய்ய உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை