உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

பொன்னேரியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

பொன்னேரி:பொன்னேரியில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது. பொன்னேரி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் நாளை காலை, 9:00 மணிமுதல் மாலை 4:00 மணி வரை, 'நலன் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இருதயம், பல், எலும்பியல், மனநலம், நரம்பியல், தோல், குழந்தைகள் நலம், கண், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, நுரையீரல், சித்தா மற்றும் பொது மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழும் முகாமில் பெறலாம். சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை