உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கிறிஸ்துமஸ் விழா விமரிசை சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை

 கிறிஸ்துமஸ் விழா விமரிசை சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை

திருத்தணி: நாடு முழுதும் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், திருத்தணி -- அரக்கோணம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., துாய மத்தேயு சர்ச்சில் நேற்று அதிகாலை 4:00 - 10:30 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். சர்ச் நிர்வாகத்தின் சார்பில், ஏழை குழந்தைகள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு இலவச சீருடை, கேக் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை முதல் மதியம் வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்துமஸ் ஒட்டி சர்ச்சுகளில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள இ.சி.ஐ., சர்ச்சில், அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதேபோல், நேரு பஜார் பகுதியில் உள்ள சர்ச் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை