உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை

திருத்தணி:புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. Galleryஇதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். திருத்தணி அடுத்த பொன்பாடி கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், நேற்று காலை, 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல, திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பாமா, ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருத்தணி பெரிய தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உட்பட பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆர்.கே.பேட்டை பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூர் தரணிவராக சுவாமி கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வங்கனுார் அஷ்டலட்சுமி சமேத வேதநாராயண பெருமாள், பள்ளிப்பட்டு வரதநாராயண பெருமாள், அம்மையார்குப்பம் லட்சுமிநாராயண பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை