குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி எம்.எஸ்.ஆர்., கார்டனில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணி முதல் சிறப்பு ஹோமம் நடந்தது. அனைத்து ராசிக்காரர்களும் ஹோமத்தில் பங்கேற்று, குரு பகவானை வழிபட்டனர்.கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை கணபதி ஹோமத்துடன் குரு பெயர்ச்சி ஹோமம் துவங்கியது. மாலை வரை நடந்த இந்த ஹோமத்தில், ஏராளமானோர் பங்கேற்று குரு பகவானை வணங்கினர்.