உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி அருகே வேகத்தடை நெ.சா.துறை நடவடிக்கை

பள்ளி அருகே வேகத்தடை நெ.சா.துறை நடவடிக்கை

திருமழிசை : திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளி அமைந்துள்ள நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி பேருந்து என, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால் மாணவ - மாணவியர் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது.இதையடுத்து, பள்ளி அருகே வேகத்தடை அமைக்க கோரி மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் பகுதிவாசிகள் பலமுறை கோரிக்கை அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்துள்ளனர். இது, பெற்றோர் மற்றும் பகுதிவாசிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை