உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டு இந்திய ஓபன் தடகள போட்டி சென்னையில் இன்று துவக்கம்

விளையாட்டு இந்திய ஓபன் தடகள போட்டி சென்னையில் இன்று துவக்கம்

சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், தேசிய அளவிலான இந்திய ஓபன் தடகள போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் இன்று துவங்கிறது. போட்டிகள், காலை 8:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 வரை, மின்னொளி விளையாட்டாக நடக்க உள்ளன.தமிழகம், ஹரியானா, டில்லி உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.போட்டியில், 100, 200, 1,500, 10,000 மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன.தமிழகம் சார்பில், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், நித்யா ராம்ராஜ், பவித்ரா வெட்கடேசன், பரனிகா இளங்கோவன், கவுதம், சிவன், ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆகிய முன்னணி வீரர் - வீராங்கனையர் இடம் பெறுள்ளனர்.இப்போட்டியில் வெற்றி பெற்று, விதிப்படி தேர்வாகுவோர், கொச்சியில் இம்மாதம் 21 - 24 வரை நடக்கும், 28வது தேசிய சீனியர் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுகுபெறுவர். மேலும், மே மாதம் இறுதியில் கொரியாவில் நடக்கும் ஆசிய போட்டியிலும், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவர் என, தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலர் லதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை