மாநில ஓபன் கால்பந்து எஸ்.ஆர்.எம்., முதலிடம்
சென்னை திருவண்ணாமலையில் நடந்த மாநில ஓபன் கால்பந்து போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தை பிடித்தது. மாநில அளவிலான ஓபன் கால்பந்து போட்டி, திருவண்ணாமலை, ஆரணியில் கடந்த, 30ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.போட்டியில், சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. அரையிறுதி ஆட்டத்தில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 3 - 1 என்ற கோல் கணக்கில், சேரன் பிரண்ட்ஸ் கிளப்பை தோற்கடித்தது.விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை - ஆரணி கிருபா கிளப் அணிகள் எதிர்கொண்டன. ஆட்டம் துவக்கத்தில் இருந்தே சமபுள்ளியில் முன்னேறின. முடிவில், 12 - 11 என்ற ஒரு கோல் வித்தியாசத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.