உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எஸ்.எஸ். பிரியாணி தயாரிப்பு கூடத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

எஸ்.எஸ். பிரியாணி தயாரிப்பு கூடத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி:சென்னை, கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்., பிரியாணி உணவகத்தில், 16ம் தேதி, பிரியாணி சாப்பிட்ட, 40 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதே நாளில் பொன்னேரியில் உள்ள அதன் கிளை உணவகத்திலும் பிரியாணி சாப்பிட்ட சிலரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. கொடுங்கயைூர் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து ‛சீல்' வைத்தனர்.செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள எஸ்.எஸ்., பிரியாணியின் சமையல் கூடத்தில் இருந்து கொடுங்கையூர் மட்டுமின்றி அதன் மற்ற கிளை உணவகத்திற்கும் பிரியாணி தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது.இதையடுத்து, அலமாதியில் உள்ள சமையல் கூடத்தை, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.ஆய்வுக்கு பின் அலுவலர் சதீஷ்குமார் கூறுகையில், ‛உணவு தயாரிப்பில் குறைபாடு இருப்பதாக தெரியவில்லை. உணவு தயாரிக்க பயன்படும் பொருட்கள் தரையில் கிடந்தன. அதை முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை