உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருத்தணி: காசிநாதபுரம் கிராமத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட காசிநாதபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தாசில்தார் குமார் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குமார், சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணை வழங்கினார். முகாமில், குறைந்த அளவில் மக்கள் பங்கேற்று மனு வழங்கினர். மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித் தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தான், அதிகளவில் மனுக்கள் குவிந்தன. சில நாட்களாக நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், பொதுமக்கள் மனுக்கள் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே இந்த முகாமில் கொடுத்த மனுக்கள் மீது, 45 நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கை இல்லாத போது, தற்போது ஏன், மீண்டும் மனு கொடுக்க வேண்டும் என, மக்கள் புலம்பினர்.