மாநில கிக் பாக்ஸிங் போட்டி டி.ஜெ.எஸ்., பள்ளி அசத்தல்
கும்மிடிப்பூண்டி, சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 9, 10, 11 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடந்தது. வயது வாரியாக ஐந்து பிரிவுகளில் நடந்த போட்டியில், இருபாலர்களில் 800 பேர் பங்கேற்றனர்.கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் தருண், 15, இப்போட்டியில் 12 - 15 வயது பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், 16 - 18 வயது பிரிவில் அஸ்ரப், 16, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர்.இந்த போட்டியில் சாதனை படைத்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயிற்றுனர் கோபியை, பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனி, முதல்வர் ஞானபிரகாசம் பாராட்டினர்.