உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில டேபிள் டென்னிஸ் சென்னை சிறுவன் சாதனை

மாநில டேபிள் டென்னிஸ் சென்னை சிறுவன் சாதனை

சென்னை : மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், 11 வயது பிரிவில், சென்னை சிறுவன் தனிஷ் வெற்றி பெற்று, எட்டாவது முறையாக, 'சாம்பியன்' பட்டம் வென்றார்.தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியை, ஐ.சி.எப்., உள்விளையாட்டு அரங்கில் நடத்தி வருகிறது. போட்டியில், 11 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. அதில், 11 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான இறுதிப் போட்டியில், ராணிபேட்டை சாருஸ்ரீ, எஸ்.டி.ஏ.டி.,யின் உஜ்ஜியினி நியோகி மோதினர். அதில், 11 - 4, 11 -5, 11 - 8 என்ற கணக்கில் சாருஸ்ரீ வெற்றி பெற்றார். அதேபோல், சிறுவர் களில் சென்னை எஸ்.கே., அகாடமியின் எச்.தனிஷ், திருவள்ளூர் வி.மித்ரன் ஆகியோர் எதிர்கொண்டனர். விறுவிறுப்பான போட்டி முடிவில், 15 - 13, 11 - 8, 9 - 11, 11 - 1 என்ற கணக்கில், தனிஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர், இதற்கு முன் நடந்த ஏழு ரேங்கிங் போட்டியிலும் தொடர்ச்சியாக 'சாம்பியன்' பட்டம் வென்றவர். போட்டிகள் தொடர்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !